StartupTN – தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் சார்பில் துபாயில் ஈமான் அமைப்பின் பொருளாளர் யஹ்யா அவர்களின் நிறுவனமான பிளாக் துலிப் மற்றும் பல்வேறு தமிழ் நிறுவனங்கள் கெளரவிக்கப்பட்டனர் பிளாக் துளிப் சார்பில் பிளாக் துளிப் இம்ரான் அவர்கள் இதற்கான கேடயத்தை பெற்றார் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கி வரும் StartupTN – தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சார்பில் தமிழ் தொழில் முனைவோர் சந்திப்பு துபாயில் நடைபெற்றது Her Excellency […]

இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்துபாயில் ஹஜ் பெருநாள் தொழுகை ஈத்கா மைதானத்தில் நிறைவு செய்து ஈமான் தலைவர் பி எஸ் எம் ஹபீஃபுல்லாகான் அவர்கள் பொது செயலாளர் ஹமீது யாசின் அவர்கள் நிர்வாகிகள் ஹாஜா அலாவுதீன்அவர்கள் , ஜமால்அவர்கள், ரியாஸ் அவர்கள், பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

புதிய கடை திறப்பு

துபாயில் பர்துபாய் பகுதியில் பழங்கள் மற்றும் இறைச்சி மொத்த வியாபாரம் புதிய கடை திறப்புபுதிய கடையின் உரிமையாளர் ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்ஈமான் பொது செயலாளர் ஹமீது யாசின் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கடையை திறந்து வைத்தார்

சர்வதேச யோகா தின நிகழ்ச்சி

துபாய் இந்திய துணைத் தூதரகம் சார்பாக துணை தூதர் சதீஷ்குமார் சிவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் ஈமான் நிர்வாகிகள் பங்கு பெற்ற பொழுது.

Global Business Excellence Awards

துபாயில் தமிழ் போரம் சார்பில் நடைபெற்ற Global Business Excellence Awards நிகழ்ச்சியில் ஈமான் தலைவர் பி எஸ் எம் ஹபீபுல்லகான் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் பொது செயலாளர் ஹமீது யாசின் அவர்கள் சிறந்த சேவைக்கான விருதும் வழங்கப்பட்டது

வர்த்தகர்கள் சந்திப்பு துவக்க விழா

முத்தமிழ் சங்கம் சார்பாக நடைபெற்ற வர்த்தகர்கள் சந்திப்பு துவக்க விழா நிகழ்ச்சி துபாய் கராமா பகுதியில் நடைபெற்றது, இதில் துபாய் ஈமான் கலாச்சார மையம் சார்பாக பொதுச் செயலாளர் ஹமீது யாசின் மற்றும் செயலாளர்கள் அஸ்கர், சமீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடல் 02/07/2024

துபாய் ஈமான் சார்பில் அடுத்தடுத்த மாதங்களில் நடைபெற உள்ள பல் வேறு நிகழ்ச்சிகள் குறித்த கலந்துரையாடல் பொது செயலாளர் ஹமீது யாசின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.