தமிழகத்தில் ஏஜென்டிடம் தலா ரூ 1
தமிழகத்தில் ஏஜென்டிடம் தலா ரூ 1 லட்சம் செலுத்தி துபாயில் பணிக்கு வந்துள்ளனர் சுரேஷ் ,செல்லையா ,முனியசாமி, தாஜுதீன் ,கணேஷ் உள்லிட்டா 6 பேர் இங்கு வந்த அவர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் வழங்காமல் மேலும் தங்குவதற்கு இடமில்லாமல் வெளியேற்றப்பட்ட நிலையில் ஈமான் கலாச்சார மையத்தை தொடர்பு கொண்ட நிலையில் உடனடியாக பொது செயலாளர் ஹமீது யாசின் அவர்கள் அவர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதல் தந்ததோடு உடனடியாக ஈமான் சார்பில் நிர்வாகி ஜமால் அவர்கள் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு இந்திய துணை தூதரகம் அழைத்து செல்லப்பட்டு அவர்களை பத்திரமாக தாயகம் அனுப்ப வேண்டிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது .






